பொள்ளாச்சி : இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் எஸ்.ஐ. விபத்தில் பலி
பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சிறப்பு ஆய்வாளர் இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவியாளர் பணிபுரிந்து வந்த கிருஷ்ணவேணி என்பவர் அங்கலம் குறிச்சியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதுயதில் இருவரும் பலத்த காயமடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் கிருஷ்ணவேணி கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சிவக்குமார் என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





