--- --:--:-- --

ஓடையில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்..!

5

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஓடைகள் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர். வரதராஜ பெருமாள் காலனியில் விடிய விடிய கனமழை பெய்தது. அந்த பகுதியில் உள்ள ஓடையில் உடைப்பு ஏற்பட்டதால் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

 

இதனால் இரவில் உறங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வீட்டிற்குள் புகுந்த நீரை பாத்திரங்கள் மூலமாக வெளியேற்றினார். ஓடைக்குள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வேகமாக தெருக்களில் செல்லும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி தலைவர் தெரிவித்திருக்கிறார்.

 

Right Menu Icon