--- --:--:-- --

மன வளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் கொடூரம்..காவல் ஆய்வாளருக்கு நோட்டீஸ்..!

5

ள்ளக்குறிச்சி அருகே மனவளர்ச்சி குறைபாடு உடைய பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் எஸ்சிஎஸ்டி பிரிவின் சட்டப்பிரிவை கூடுதலாக சேர்க்க வேண்டும் என்று காவல் ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையம் முடிவு செய்துள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் மன வளர்ச்சி குறைபாடுடைய 20 வயது பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க மறுத்தது குறித்து எஸ்சிஎஸ்டி ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்ட மீதான விசாரணை இன்று தொடங்கியது.

 

பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தையும் அளித்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சட்டப்பிரிவை கூடுதலாக சேர்க்க வேண்டும் என்று காவல் ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையம் முடிவு செய்துள்ளது.

 

Right Menu Icon