ரூம் எடுத்த 17 வயது மாணவ, மாணவி..அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்த மாணவி..!
கும்பகோணம் மோதினால் தெருவிலுள்ள ஹோட்டல் தங்கும் விடுதியில் 17 வயது கல்லூரி மாணவியும் 17 வயது கல்லூரி மாணவரும் தங்கியிருந்த நிலையில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் கல்லூரி மாணவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவனை கைது செய்திருந்தனர். நடைபெற்ற ஹோட்டல் உரிமையாளர் மீதும், கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் அந்த விடுதி கட்டிட உரிமம் தொடர்பாக விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வந்ததாக அதன் உரிமையாளர்களிடம் கும்பகோணம் வட்டாட்சியர் விளக்கம் கேட்ட நிலையில் உரிய விளக்கமும் அளிக்காததால் உரிமம் தொடர்பான மனு தள்ளுபடி செய்யப்பட்டதாலும் ஹோட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.






