10 வயது சிறுவன் மரணம்..பீதியில் தேனி மக்கள்..!
தேனி மாவட்டம் சங்கரமூர்த்திபட்டியில் காய்ச்சல் பாதித்த சிறுவன் உயிரிழந்த நிலையில் கழிவுநீர் செல்லும் வாய்காலில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளதால் பல நேரங்களில் குடிநீர் கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அந்த பகுதி வாசிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் சுகாதாரத் துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.






