சிலிண்டரில் வாயு கசிந்து வெடித்த விபத்தில் தந்தை, மகள் தீக்காயம்..!
திருப்பூர் அருகே சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவா என்பவர் தனது மனைவி மகாலட்சுமி மகள்கள் உடன் வசித்து வந்துள்ளார்.
கணவன், மனைவி இருவரும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். மகள்கள் இடுவம்பாளையம் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்களது வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பற்றி வீடு முழுவதும் பரவியது. இதில் சிறுமி கவுசல்யா மற்றும் ஜீவா ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





