ஹவாலா பணம் பறிமுதல்..சிக்கிய வட மாநில இளைஞர்..!
கோவை செல்லும் பேருந்தில் ஹவாலா பணம் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் பேருந்தில் ஆய்வு செய்தனர். அப்பொழுது ராஜஸ்தானை சேர்ந்த ஹிமாராம் என்பவரிடம் கட்டு கட்டாக 40 லட்சம் ரூபாய் இருந்ததை கண்டறிந்தனர்.
அவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லாததால் கைது செய்து விசாரித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பணத்தை கைமாற்றி வந்துள்ளார். அந்த வகையில் சித்தோடு பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாக தனது சட்டையின் வண்ணத்தை அடையாளம் கண்டு சந்தித்த ஒருவரிடம் தான் கொண்டுவந்த பத்து ரூபாய் தாளை கொடுத்துள்ளார்.
அதனை ஆய்வு செய்த நபர் 40 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். 40 லட்சத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் வருமானவரி துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.





