--- --:--:-- --

கடலில் இறங்கிய மக்களை எச்சரித்து திருப்பி அனுப்பிய காவல்துறை..!

3

புதுச்சேரி கடற்கரையில் இருந்த மக்களை காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் புதுச்சேரி தலைமை செயலகத்திற்கு உள்ள கடற்கரையில் சுற்றுலா பயணிகளும் மக்களும் பலர் வழக்கம் போல குவிந்தனர். ஆபத்தை உணராமல் சிலர் கடலில் குளிக்கவும் முயன்றனர். அவர்களை எச்சரித்து கடற்கரைகளில் இருந்து காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.

 

கடலில் யாரும் இறங்க வேண்டாம் என்றும் ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மழை தொடரும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்க புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

Right Menu Icon