திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்..!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள திருமூர்த்தி பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக குருமூர்த்தி மலை அமரலிங்கேஸ்வரர் கோயில் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.






