தேர்தல் அரசியலை மட்டும் முன்னிறுத்தும் சராசரி கட்சி அல்ல திமுக – திருமாவளவன் பேச்சு!
திமுக பவள விழாவில் பங்கேற்று பேசிவரும் விசிக தலைவர் திருமாவளவன், “திமுகவின் மூன்றாவது குழலாக விடுதலை சிறுத்தைகள் கட்சி. தேர்தல் அரசியலை மட்டும் முன்னிறுத்தும் சராசரி கட்சி அல்ல திமுக.
அண்ணா வழியில் இயங்கும் சமூக நீதி இயக்கம் திமுக. 75 ஆண்டுகளாக வெற்றிநடை போடுகிறது திமுக. பெரியாரின் கொள்கை பேரன் முதல்வர் ஸ்டாலின். திராவிட பாரம்பரியத்தை பின்பற்றுவதால் தான் திராவிட மாடல் ஆட்சியென பிரகடனப்படுத்தி ஆட்சி செய்து வருகிறார்” என்று தெரிவித்தார்.






