--- --:--:-- --

திருவாடானை தெற்கு தெருவில் 101 பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த மக்கள்..!

3

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தெற்கு நடுத்தெரு ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் ஆலய உற்ற விழா கடந்த 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுகளுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று  (செப் 24) உற்சவ விழா நடைபெற்றது. இதில் கோவில் முன்பு பக்தர்கள் 101 பானைகளில் பொங்கல் வைத்து அதை அம்மனுக்கு படையலிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில் பெண் பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon