கச்சத்தீவை தர முடியாது: ரணில்
இந்தியாவுக்கு கச்சத்தீவை தரவே முடியாது என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கச்சத்தீவு பற்றிய பேச்சுவார்த்தைக்கு இலங்கை தயாராக இல்லை.
இந்தியாவுக்கு காஷ்மீர் எப்படியோ, அப்படித்தான் இலங்கைக்கு கச்சத்தீவு எனக் கூறியுள்ளார். தமிழக அரசியல் தலைவர்கள் கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், ரணில் இவ்வாறு கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




