சிக்கன் வறுவல் சாப்பிட்ட வாடிக்கையாளர்கள்..மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!
சென்னை கொடுங்கையூரில் பிரபல உணவகத்தில் சிக்கன் உணவு சாப்பிட்ட 7 பேர் வயிற்றுப்போக்கினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடசென்னை கொடுங்கையூர் பகுதிக்கு உட்பட்ட கண்ணதாசன் நகர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் ஹோட்டலில் கடந்த திங்கள்கிழமை இரவு முல்லை நகர் பகுதியில் பொறுத்து சிக்கன் வாங்கியுள்ளார். பார்சல் வாங்கிய உணவை வீட்டிற்கு கொண்டு சென்று குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.
மறுநாள் காலை வீட்டில் இருந்த அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக வீட்டில் இருந்த அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் தண்டையார்பேட்டை அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





