--- --:--:-- --

திட்டிய வாடிக்கையாளர்.. விபரீத முடிவு எடுத்த டெலிவரி பாய்..!

4

சென்னையில் டெலிவரி கொடுக்க சென்ற இடத்தில் பெண் வாடிக்கையாளர் திட்டியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த பவித்ரன் என்ற இளைஞர் கல்லூரியில் படித்துக் கொண்டே தனியார் நிறுவனத்தில் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

கடந்த 10ம் தேதி கொரட்டூர் மோகன் கார்டன் பகுதிக்கு டெலிவரிக்கு பவித்ரன் சென்று இருந்த பொழுது பின் வாடிக்கையாளர் ஒருவருடன் முகவரி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த பெண் வாடிக்கையாளர் பவித்ரனை திட்டியதாக கூறப்படுகிறது.

 

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் பவித்ரன் அந்த பெண் வாடிக்கையாளரின் வீட்டு கண்ணாடியை உடைத்துள்ளார். இது தொடர்பான புகாரில் பவித்ரனை அழைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் மன்னிப்பு கேட்க கூறியதோடு கண்ணாடியையும் மாற்றி கொடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

 

பவித்ரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். தற்கொலை தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon