--- --:--:-- --

9 வது நாளாக சாம்சங் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்..!

5

ஊதிய உயர்வு தொழிற்சங்க அதிகாரம் குறித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்பது நாளாக ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஊதிய உயர்வு தொழிற்சங்கம் அங்கீகாரம் போனஸ் பணியிடத்தை 8 மணி நேரமாக நிர்ணயிப்பது தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுவது உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து samsung தொழிற்சாலை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

9வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில் இன்று மாலை அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

 

இந்த நிலையில் ஊழியர்களிடம் பணிக்கு வருமாறு இதனால் பல்வேறு நிலைகளில் பயனடைய வாய்ப்புள்ளதாகவும் கூறி அவர்களின் குடும்பத்தினருடன் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon