ஒரே அமரர் ஊர்தியில் இரு உடல்களை ஏற்றிய ஆம்புலன்ஸ்..!
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஒரே அமரர் ஊர்தியில் இரு வேறு பகுதியைச் சேர்ந்த இருவரின் உடலை ஏற்றிச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பாண்டி பிரபு திருப்பூரில் ஓட்டுனராக பணியாற்றி வந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவருக்கு பிறகு அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊருக்கு உடலை எடுத்து செல்ல பாண்டி பிரபுவின் தந்தை இலவச அமரர் உறுதி சேவையை நாடியுள்ளார். திருப்பூர் அரசு மருத்துவமனையும் அதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
மகனின் உடலுடன் அமரர் ஊர்திக்கு சென்ற பொழுது அந்த ஏழை தந்தைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாண்டி பிரபுவின் உடலுடன் விருதுநகரை சேர்ந்த மற்றொரு நபரின் உடலையும் மருத்துவமனை ஊழியர்கள் ஏற்ற முயன்றுள்ளனர். ஒரே வாகனத்தில் எப்படி இரண்டு உடல்களை எடுத்துச் சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





