திமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி உட்பட மாற்றுக் கட்சியினர். 42 பேருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிப்பு..!
திமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி உட்பட மாற்றுக் கட்சியினர். 42 பேருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் மாவட்ட செயலாளர்.
சத்தியமங்கலம், செப்டம்பர்.14: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகரில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக நிர்வாகி உட்பட 42 பேர் மாற்று கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
பவானிசாகர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் தொட்டம்பாளையம் டிஎன்எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் ஆறுச்சாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். பவானிசாகர் பேரூராட்சி தலைவர் மோகன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் கலந்து கொண்டு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து மாற்று கட்சியில் இருந்து விலகிய இளைஞர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை தலைவர் திவாசாகர் கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதேபோல் 42 இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.






