--- --:--:-- --

குழந்தையை விற்பனை செய்த 3 பேர்..!

6

தேனி மாவட்டத்தில் குழந்தைகள் விற்பனை செய்த தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். உப்புக்கோட்டை கிராமத்தில் குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக குழந்தைகள் நலத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் போடியைச் சேர்ந்த சிவகுமார், உமா மகேஸ்வரி தம்பதியினர் சங்கர் என்பவரிடம் குழந்தையை விலைக்கு வாங்கியது தெரிய வந்தது.

 

இதையடுத்து குழந்தையை வாங்கிய மற்றும் விற்பனை செய்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் விற்பனை செய்த குழந்தையை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

 

Right Menu Icon