--- --:--:-- --

தங்க சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்..!

3

சென்னையில் இரண்டரை சவரன் தங்கச் சங்கிலியை குப்பையில் தவறவிட்ட உரிமையாளரிடம் தூய்மை பணியாளர் கண்டெடுத்து பத்திரமாக ஒப்படைத்தார். அடையாறு பரமேஸ்வர் நகரை சேர்ந்த காமாட்சி சந்தானம் என்பவர் தனது இரண்டரை சவரன் தங்கச் சங்கலியை குப்பையில் தவற விட்டுள்ளார்.

 

இந்த குப்பையை சேகரிக்க சென்ற தூய்மையை பணியாளர் பாலு என்பவர் அதனை தராமல் பிரித்த பொழுது தங்கசங்கலி இருந்தது தெரியவந்தது. துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில் அதனை தவறவிட்டவர் யார் என்பது தெரிய வந்தது.

 

உரிமையாளர் வீட்டிற்கு சென்று நகை ஒப்படைக்கப்பட்டது. நகையை பெற்றுக்கொண்ட உரிமையாளர் தூய்மை பணியாளருக்கு நன்றி தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon