பரனூர் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல்..!
தென் மாவட்டத்திற்கு சென்றிருந்த மக்கள் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை நோக்கி படையெடுத்துள்ள நிலையில் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் கார், அரசு பேருந்து, ஆம்னி பேருந்து, ஆட்டோ என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால் 30 நிமிடங்களுக்கு மேலாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





