ஸ்தம்பித்தது சென்னை நெடுஞ்சாலை..!
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாள் விடுமுறைகள் முடிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி மக்கள் கிளம்பியுள்ளனர்.
ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி கிளம்பியுள்ளதால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வாகன ஓட்டிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.






