திருப்பூர்: கஞ்சா சாக்லேட் வைத்திருந்த வாலிபர் கைது
மடத்துக்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையிலான போலீசார், செங்கம் பழனி புதூர் பஸ் நிறுத்தம் பகுதிகள் சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வட மாநில வாலிபரை நேற்று கைது செய்தனர்.






