--- --:--:-- --

சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

3

அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்கக் கூடிய உணர்வை தருகிறது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்கா பொருளாதார மாநிலமாக ஆக்குவதே இலக்கு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து அதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் அதிகளவிளான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.

 

தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் இதுவரை மொத்தம் 10 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

 

அதன்படி, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில், ரூ 400 கோடியில், சுமார் 500 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் ஓமியம் நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. முதல்வர் ஸ்டாலின் தற்போது சிகாகோ சென்றுள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு சிகாகோ வாழ் தமிழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon