மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை..ஆந்திராவைச் சேர்ந்த இருவர் செய்த அதிர்ச்சி செயல்..!
மயிலாடுதுறை அருகே மணலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுகிசி அளிப்பதாக கூறி நூதன முறையில் பணமோசடி செய்த ஆந்திராவைச் சேர்ந்த இருவரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, குத்தமங்கலம் மாரியம்மன் கோயில் தோப்பு தெருவை சேர்ந்த ராஜசேகர் ரேணுகாதேவி தம்பதிக்கு மண நலம் பாதிக்கப்பட்ட ஒன்பது வயது மகன் உள்ளார்.
இதையறிந்த ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கு சிகிச்சையளிப்பதாகவும் ஆறு மாதத்தில் குணம் ஆகிவிடும் எனக்கூறி பெற்றோரை அணுகியுள்ளனர். சிகிச்சைக்காக 84,000 பணத்தை பெற்றுக்கொண்டு மாயமாக்கியுள்ளனர்.
இது குறித்து மணல்மேடு காவல் நிலையத்தில் ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்வது விசாரணை நடத்தி வந்தனர். அப்பொழுது புதுக்கோட்டை பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மோசடி நபர்கள் மஞ்சுநாதரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






