மூன்று வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்து..!
சிவகங்கையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் சரக்கு வாகன ஓட்டுனர் உட்பட இருவர் காயம் அடைந்தனர். சிவகங்கை காலேஜ் ரோடு பகுதியில் மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியை சேர்ந்த ராம் பிரகாஷ் என்பவர் தனது சொகுசு காரில் சென்றுள்ளார்.
அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்து அவரது கார் சாலையோரமாக நின்று கொண்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது.
இந்த விபத்தில் டாடா ஏசி ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் சிவ தனுஷ் ஆகிய இருவரும் காயமடைந்து சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து சிவகங்கை நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






