திருவாடானையில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வடக்கு தெருவில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் புதிய கற்சிலை நிறுவி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கோவில் முன்பு உள்ள யாக சாலையில் நேற்று அணுக்ஞை, கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, கலா கர்ஷணம் முதல் கால யாக சாலை பூஜை உடன் தொடங்கி அதனைத் தொடர்ந்து பூர்ணாகுதி தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. அதில் கோ பூஜை நாடி சந்தானம் நடைபெற்றது. பின்னர் மகா பூர்ணாகதி தீபாரதனை தொடர்ந்து யாக சாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயிலை சுற்றி வலம் வந்து கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள்கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இந்த கும்பாபிஷேகத்தை கான சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. திருவாடனை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




