--- --:--:-- --

திருவாரூரில் நடந்த பெண் கொலையில் நடந்த திருப்பம்..!

4

தனியாக இருந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த விவகாரத்தில் குற்றம் நடந்த 12 மணி நேரத்தில் கேபிள் ரிப்பேர் வேலை பார்த்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

 

இலவங்குடி பகுதியைச் சேர்ந்த நாகநாதன் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் 40 வயதான அவருடைய மனைவி பிரபாவதி நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

விசாரணையில் காலையில் கேபிள் வேலை பார்த்த 20 வயதான இளைஞர் சந்தோஷ் பிரபாவதி தனியாக இருப்பதை நோட்டமிட்டு இரவு 9 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.

 

கொலையான பிரபாவதியின் தாலிச்செயின் மற்றும் செல்போனை திருடி சென்ற சந்தோஷ் தன்னுடைய சிம் கார்டை பிரபாவதி செல்போனில் மாற்றியதை வைத்து அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon