பாரா ஒலிம்பிக் போட்டியிலிருந்து இந்திய பேட்மின்டன் வீரர் தகுதி நீக்கம்!
ஊக்க மருந்து விதிகளை மீறியதாக இந்திய பாரா பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.2021-ல் டோக்யோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று SL 3 பிரிவில் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
இந்நிலையில் ஊக்கமருந்து விதிகளின்படி வீரர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள் என்பதை விளையாட்டு நிர்வாகிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த சூழலில் கடந்த 12 மாதங்களில் 3 முறை எங்கே இருக்கிறார் என்பதை அறிவிக்காத பிரமோத் பகத்தை 18 மாதங்கள் இடைநீக்கம் செய்து சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அறிவிப்பை வெளியிட்டது.
இடைநீக்கத்தால் வரும் 28 ஆம் தேதி தொடங்கும் பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் பிரமோத் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிரமோத் பகத் இதுவரை 4 முறை உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். போலியோவால் பாதிக்கப்பட்ட பிரமோத் பகத்திற்கு 5 வயதில் இடது காலில் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




