செந்தில் பாலாஜிக்கு நாளை ஜாமின் கிடைக்குமா?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், கீழமை நீதிமன்றம், சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தை அவர் நாடினார். அவரது மனுவை விசாரித்த, நீதிபதிகள் அபய் ஒகா, ஜார்ஜ் மஸி அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




