குடித்துவிட்டு நடுரோட்டில் போதையில் தள்ளாடிய இளம் பெண்..!

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பு மது போதையில் மயங்கி கிடந்த இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் மது போதையில் தள்ளாடியபடி கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

 

போதை அதிகமாகி நடக்க முடியாதவர் நுழைவு வாயில் அருகே சாலையில் படுத்து உறங்கினார். காட்டூர் காவல் நிலைய போலீசார் இளம் பெண்ணை பத்திரமாக மீட்டு அங்கிருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.