பாண்டுகுடி கிராமத்தில் மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் ஒருவர் பலி..!
பாண்டுகுடி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. ஏரளாமானோர் கண்டு ரசித்தனர். மாடு முட்டியதில் ஒருவர் பலி. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, பாண்டுகுடி அருகே கோனேரியேந்தல் கிராத்தில் அருள்மிகு மகாலிங்க மூர்த்தி, ஆகாச அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது.
இக்கோவில் திருவிழாவினை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது 100க்கும் மேற்பட்ட காளைகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு முன்னதாக ஒவ்வோர் மாட்டின் உரிமையாளருக்கு டோக்கன் வழங்கி ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக கட்டுதரை யில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

மந்த விரட்டின் தொடக்கமா முதலில் கோவில் காளைகளுக்கு மரியாதை செய்து அவிழ்த்து விட்ட பிறகு மற்ற காளைகள் கட்டுத்தரையில் இருந்து சீரிப்பாய்ந்த காளைகளை பிடிக்க வீரர்கள் துரத்தினர். இந்த நிகழ்வை கான ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். மஞ் விரட்டில் கலந்து கொண்ட காலையில் உரிமையாளருக்கு வேட்டி, துண்டு, தாம்பூல தட்டு. பிளாஸ்டிக் சேர், டிரம் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆதியூரைச் சேர்ந்த பாக்கியம் என்பவரை மாடு முட்டியதில் குடல் சரிந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.





