வினேஷ் போகத் தகுதி நீக்கப்பட்டது ஏன்..?
மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், இதுவரை எந்த பதக்கமும் வெல்லாமல் ஏமாற்றமடைந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் 48 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத் தனது 22 வயதில் பங்கேற்றார். இதில் கால் இறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார்.
இதையடுத்து 2021 ஆம் ஆண்டு டோக்யோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 53 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், பார்வை குறைபாடு காரணமாக 2வது சுற்றிலேயே வெளியேறினார்.இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங்க்கு எதிராக 2023 ஆம் ஆண்டு வினேஷ் போகத் உள்ளிட்ட வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டக்களத்திலேயே பயிற்சி மேற்கொண்டார் வினேஷ் போகத். தொடர்ந்து முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் 53 கிலோ எடைப்பிரிவிலிருந்து 50 கிலோவுக்கு மாறினார்.பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், துரதிர்ஷ்டவசமாக பதக்க வாய்ப்பை இழந்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நாடாளுமன்ற மக்களவையில் இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர், “இன்று அவரது எடை 50 கிலோ 100 கிராம் என கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.இந்த விவகாரத்தில் உலக மல்யுத்த கூட்டமைப்பிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா பாரிஸில் இருக்கிறார். பிரதமர் அவரிடம் பேசி, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தனிப்பட்ட பணியாளர்கள் உட்பட அவருக்கு அனைத்து வசதிகளையும் அரசு வழங்கியது” என்றார்.






