நாணயக் கொள்கைக் குழு கூட்டம் அறிவிப்பு..!
ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு கூட்டம் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 8ஆம் தேதி கொள்கை முடிவுகளை RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட இருக்கிறார்.
இதில், ரெப்போ வட்டி விகிதம் மற்றும் பிற வட்டி விகித மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதேநேரம், இம்முறை ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.





