கல்லூரியில் 4வது நாளாக தொடரும் போராட்டம்.. விரிவுரையாளர்களுக்கும், மாணவர்களுக்கும் அதிர்ச்சி..!
பெரம்பலூரில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள் கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள், பகுதிநேர விரிவுரையாளர்கள் நிலுவையில் உள்ள ஏழு மாத சம்பளத்தை வழங்க கோரி கடந்த நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விரிவுரையாளர்களின் போராட்டத்தை அரசு கவனத்தில் கொண்டு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.
கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





