ரீல்ஸ் மோகத்தால் சிக்கிய இளம் ஜோடி..!
திருப்பூரில் இளம்பெண் ஒருவர் அவரது காதலனை பைக்கில் அமர வைத்து ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிய காணொளி இணையத்தில் வைரலான நிலையில் காவல்துறை 11,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராமர் தனது தோழி பிரீத்தியுடன் பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பைக்கின் பெட்ரோல் டேங்கில் ராமர் அமர்ந்திருக்க பிரீத்தி இருசக்கர வாகனத்தை ஓட்டும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டது.
இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் வீடியோவை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வாகன உரிமம் இல்லாமல் பிரீத்தி வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாதது, சாலை விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியது உள்ளிட்ட காணொளிகளுக்காக 13 ஆயிரம் ரூபாய் அபராதத்தை காவல்துறையினர் விதித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





