தடை செய்யப்பட்ட மீன் வலைகளை பயன்படுத்தி இருதரப்பு மீனவர்களிடைய மோதல்..!
பழவேற்காடு கடலில் அத்துமீறி சுருக்கு பிடி மின்வலை பயன்படுத்தியதால் 41 பூம்புகார் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் 6 மணி நேரத்திற்கு பிறகு உடன்பாடு எட்டப்பட்டது.
பழவேற்காட்டில் வெளி மாவட்ட மீனவர்கள் எல்லை தாண்டியும் தடை செய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தி மீன் பிடிப்பதில் உள்ளூர் மீனவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த 30ஆம் தேதி பூம்புகார் மீனவர்கள் அத்துமீறியது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு மேல் சமாதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் பூம்புகார் மீனவர்கள் வலைகளை பலவேற்காடு கடலில் பயன்படுத்தியுள்ளனர்.
அவர்களை சுற்றி வளைத்து உள்ளூர் மீனவர்கள் 41 பேரை சிறை பிடித்து மீன்வளத்துறை உதவி இயக்குனரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து பாதுகாப்பு மையத்தில் சிறைபிடிக்கப்பட்ட பூம்புகார் மீனவர்கள் பழவேற்காடு மீனவர்களோடு மீன்வள துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தடை செய்யப்பட்ட வலைகளால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் சிறைபிடிக்கப்பட்ட ஏழு டன் வலைகளையும் விசைப்படகையும் விடுவிக்க முடியாது என பழவேற்காடு மீனவர்கள் திட்டவட்டமாக கூறினார்.
ஆனால் தவறுதலாகவே எல்லை தாண்டி விட்டதாகவும் இனி அவ்வாறு நிகழாது என்றும் சிறைபிடிக்கப்பட்ட பூம்புகார் மீனவர்கள் உறுதியளித்தனர். சுமார் 6 மணி நேரம் நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





