பைக்கை தூக்கி வீசிய கார்..சம்பவ இடத்திலேயே நிகழ்ந்த சோகம்..!
நாமக்கல் மாவட்டம் மறவர் பாளையம் உள்ள இடத்தில் இருசக்கர வாகனத்தில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற தம்பதி அதிவேகமாக வந்து கார் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பொழுது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் அவர்கள் மீது மோதியது. இருசக்கர வாகனம் மீது மோதிய வேகத்தில் கார் சாலையோரம் கவிழ்ந்தது.
அதில் பயணித்த நான்கு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





