மதுரையில் பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கிய சம்பவம்..!
மதுரையில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வைகை ஆற்றுப்பகுதியில் உள்ள கல்பாளத்தில் பள்ளி மாணவர் ஒருவரை பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் செல்லூர் பகுதியில் இருந்த மாணவரை அழைத்து வந்து சரமாரியாக தாக்கியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோ காட்சியை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





