--- --:--:-- --

திருப்பூரில் பரபரப்பு..கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற 3 மாணவிகள்..!

3

திருப்பூரில் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் வேலைக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மூன்று மாணவிகள் மாயமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே 15 வயது மாணவிகள் இருவரும் மாயமாகியுள்ளனர்.

 

இதனால் மாணவர்களின் பெற்றோர் இரவு வீட்டிற்கு வந்தனர். அப்பொழுது வீட்டில் மாணவிகளை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் மாணவிகள் எழுதி வைத்த கடிதம் ஒன்று பெற்றோருக்கு கிடைத்தது.

 

அதில் தாங்கள் சென்னைக்கு செல்வதாகவும் எங்களை யாரும் தேட வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon