--- --:--:-- --

உள்துறை செயலர் அமுதா உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..!

1

மிழ்நாட்டின் உள்துறை செயலாளராக இருந்த அமுதா வருவாய்த்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, உள்துறை செயலாளராக இருந்த அமுதா, வருவாய்த்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த தீரஜ் குமார், உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதே போன்று சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு, நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரனை நியமித்து தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

 

சிட்கோ நிர்வாக இயக்குநராக உள்ள மதுமதி, பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு திட்டத்துறையின் முதன்மைச் செயலாளராக ஹர் சஹாய் மீனாவை நியமித்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

 

இதே போன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளராக வீரராகவ ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். தீரஜ் குமார் கவனித்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக குமார் ஜெயந்த்தை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

 

வருவாய்த்துறை செயலாளராக இருந்த ராஜாராமன் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கூடுதல் செயலாளராக சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

நிதித்துறை துணை செயலாளராக ரிஷப்பையும், பொதுத்துறை துணை செயலாளராக விஷ்ணு சந்திரனையும் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த வளர்மதி சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறையின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon