--- --:--:-- --

நெடுஞ்சாலையில் குறுக்கே வந்த பாம்பால் லாரியை நிறுத்திய ஓட்டுனர்..!

6

சென்னையில் லாரிக்குள் பாம்பு புகுந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை மதுரவாயில் பகுதியில் லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

 

அப்பொழுது பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே சென்றதால் லாரி ஓட்டுநர் பாம்பு மீது ஏற்றாமல் இருக்க லாரியை நிறுத்தியுள்ளார். ஆனால் அந்த பாம்பு லாரிக்குள் புகுந்து கொண்டது. இதனால் அடுத்தடுத்து பின்னால் வந்த வாகனங்கள் சென்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை லாவமாக பிடித்துக் கொண்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

 

Right Menu Icon