--- --:--:-- --

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் அதிரடி கைது..

1

நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரும் பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்தவருமான கருணாநிதி மற்றும் தமிழக அரசை தரக்குறைவாக விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நெல்லையில் ஹோட்டலில் தங்கியிருந்த சட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Right Menu Icon