மத்திய அரசு ஊழியர்களுக்கு உயரும் ஊதியம்..!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது நடந்தால் ஏராளமான பணியாளர்கள் பலனடைவார்கள்.பணவீக்கம் மற்றும் விலைவாசி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 4% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியுள்ளது.தற்போது பணியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாது, ஓய்வூதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டதால், தற்போது ஊதியத்துடன் ஒப்பிடுகையில் 50% -ஐ எட்டியுள்ளது.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரித்துள்ளதால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கணிசமாக அதிகரித்துள்ளது. ஜனவரி 1, 2024 முதல் கணக்கிடப்பட்டுள்ளதால், தற்போது, 50% -ஐ எட்டியுள்ளது. இந்த வரிசையில் வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட சில கொடுப்பனவுகளும் உயரும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
செலுத்தப்பட வேண்டிய அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட வேறு சில கொடுப்பனவுகளும் 25 சதவீதமாக உயர்த்தப்படும்.திருத்தப்பட்ட ஊதிய அமைப்பில் வழங்கப்படும் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது, கொடுப்பனவு விகிதங்களும் 25% அதிகரிக்க வேண்டும்.
இந்த வரிசையில் அதிகரிக்கப்படும் படிகள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.சிறப்பு இழப்பீடு (நெடுந்தூரப் பகுதிகளில் பணிபுரிவோர்) படி, வனப்பகுதிகளில் பணிபுரிவோருக்கான படி, பழங்குடியினர் பகுதி படி போன்றவை கடினமான இருப்பிட கொடுப்பனவு எனப்படும். இப்பகுதிகளில் பணிபுரிவோருக்கு ரூ.1000 முதல் ரூ.5300 வரை சிறப்பு இழப்பீடு உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும்.
போக்குவரத்து படியும் உயரும். மேலும், மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளுக்கான சிறப்பு உதவித் தொகையும் அதிகரிக்கப்படும். குழந்தைகள் உள்ள மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்த உதவித்தொகை மாதம் ரூ.3,000 வரை வழங்கப்படுகிறது.
குழந்தைகள் கல்வி உதவித்தொகை, வீட்டு வாடகைப் படி, ஆடை அலவன்ஸ், ஸ்லிபிட் டூட்டி அலவன்ஸ், டெபுடேஷன் அலவன்ஸ் போன்றவற்றையும் அதிகரிக்க வேண்டும். எனவே, இவை அதிகரித்தால், ஊழியர்களின் ஊதியமும் உயர வாய்ப்புள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




