--- --:--:-- --

தொண்டி பேருராட்சியில் லஞ்சம் வாங்கிய செயல் அலுவலர் உட்பட மூவர் கைது ..!

11

தொண்டி பேருராட்சி அலுவலகத்தில் கட்டிடம் கட்டுவதற்க்காக அனுமதி கொடுப்பதற்க்காக லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலிசார் இருவரை பிடித்தனர்.

 

தொண்டி அனீஸ்நகர் முகம்மது இப்ராஹிம்ஷா  இவரது உறவினரால் கட்டப்படும் வளாகம் மற்றும் வீட்டைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பாளராக உள்ளார்.

இந்த சொத்துக்கு வரி ரசீதுக்காக தொண்டி பேருராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் மற்றும் அலுவலக கிளார்க ரவிச்சந்திரனை அணுகியபோது, ​​அவர்களிடம் ரூ.  20, ஆயிரம் செலவு செய்தால் சொத்து வரி ரசீது வழங்குவதாக கூறியுள்ளார். இதையடுத்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலிசார் கொடுத்த பணத்தை இவ் அலுவலகத்தில் தற்காலிகமாக பணிபுரியும். தொண்டிராஜ் என்பவரிடம் மற்றொரு கட்டிட பொருப்பாளரான நைனாமுகம்மது கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலிசார் கைது செய்தனர்.

இதையடுத்து  ராமநாடு விஜிலென்ஸ் டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான போலிசார் தொண்டி பேருராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம், அலுவலக கிளார்க் ரவிச்சந்திரன்.,  ஊழியர் தொண்டி ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து செயல் அலுவலர் உட்பட மூவரையும் கைது செய்தனர். மேலும் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon