--- --:--:-- --

இன்ஸ்டாவில் போலீசாருக்கு கொலை மிரட்டல்..!

6

ன்ஸ்டா லைவில் திருவொற்றியூர் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த சரித்திர பதிவேடு குற்றவாளி கைது செய்யப்பட்டார். சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரிஷி கண்ணன் என்ற ரவுடி திருவொற்றியூரில் உள்ள ரியல் எஸ்டேட் ஊழியரிடம் 50,000 ரூபாய் பணம் வாங்கி வாங்கி வரும்படி தேசப்பன், வருன் ஆகிய இருவரை அனுப்பி வைத்துள்ளார்.

 

ஆனால் உரிய பணம் தர மறுத்ததால் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருவெற்றியூர் போலீசார் இருவரை கைது செய்து தலைமறைவாக இருந்த ரிஷி கண்ணனை தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான கண்ணன் இன்ஸ்டாவில் திருவொற்றியூர் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் வெளியூருக்கு தப்பி செல்ல முயன்றவனை போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon