--- --:--:-- --

திருவாடானை அருகே நடந்த புனித பேதுரு ஆலய சப்பர பவனி..!

3

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னகீரமங்கலம் கிராமத்தில் புனித பேதுரு ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா ஜூலை .26ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வோர் நாளும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, நவநாள் நிகழ்வு நடந்தது. திரு பலியினை பங்குதந்தைகள்  நடத்தினர்.

 

திருவிழாவில் சிறப்பு திருப்பலியைத் தொடர்ந்து புனித பேதுரு  வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைத்து அழங்கரித்து வீதி உலா பவனி வந்து இறைமக்களுக்கு அருள் வழங்கினார்.

இந்த சப்பர பவனியின் போது  வான வேடிக்கை நடைபெற்றது.  இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இறைமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள். இன்று கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

Right Menu Icon