--- --:--:-- --

நம்புதாளையில் இளைஞர் தலையில் ஆட்டு குழவியை போட்டு கொடூர  கொலை..!

2

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை மேற்கு தெருவைச் சேர்ந்த சிராஜுதீன். இவர் தொண்டியில் டீக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார் இவருக்கு 4 மகன்கள் ஒரு மகள் உள்ளார். இதில் 2வது மகன் அபுபக்கர் (26). இவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த மிர்சான் அலி (38).

 

மனைவி செய்யதலி பாத்திமா (34). என்பவருக்கும் இடையே தகாத தொடர்பு இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று நம்புதாளை தனியார் விளையாட்டு அரங்கு எதிரே ஆற்றுக்கரை தெருவில்  செய்யதலி பாத்திமா வீட்டின் கொல்லைப்புரத்தில் அபுபக்கர் ஆட்டுக்கல் குழவியை தலையில் போட்டு கொலை  செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு திருவாடானை டி.எஸ்.பி. நிரேஷ்பழனிவேல், பயிற்சி டி.எஸ்.பி.யாஸ்மின் பானு, தொண்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆசைத்தம்பி பாலமுருகன், காளீல்வரன் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சப் -இன்ஸ்பெக்டர் கமல், சேது ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து கொலை தொடர்பாக குற்றவாளியை தேடி வருகின்றனர்.

 

புதிய குற்றவியல் சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர் .

Right Menu Icon