--- --:--:-- --

நொடி பொழுதில் நாய்களிடமிருந்து சிறுவனை காத்த தந்தை..!

5

கோவை நகரில் சுற்றி வளைத்த தெருநாய்களிடமிருந்து தனது குழந்தையை நூலிழையில் தந்தை காப்பாற்றிய கண்காணிப்பு கேமரா பதிவுகள் வெளியாகியுள்ளன.

 

வெள்ளனூர், மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த நபர் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டில் முன்புறம் நிறுத்திவிட்டு மகனை கீழே இறக்கிவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அந்த பகுதியை சேர்ந்த தெரு நாய்கள் குழந்தையை நோக்கி ஓட வந்துள்ளன.

 

நாய்களை கண்டதும் சிறுவன் கையில் எடுத்துக்கொண்டு கூச்சலிட அவனது தந்தை தாமதிக்காமல் ஓடி வந்து நொடிப்பொழுதில் தெரு நாய்களிடமிருந்து சிறுவனை காப்பாற்றியுள்ளார். தற்பொழுது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon