5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர்..!
திருவண்ணாமலையில் தான் திரைப்பட இயக்குனர் என்று கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக மனைவி அளித்த புகார் மீது காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த வேங்கி கால் பகுதியைச் சேர்ந்த பூர்ணிமா என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரில் சினிமா இயக்குனர் என்று கூறி தன்னை திருமணம் செய்து குடியாத்தம் பகுதியில் சேர்ந்த லட்சுமி காந்தன் என்பவர் இதேபோன்று ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டதை தொடர்ந்து காவலர்கள் விசாரணையை தொடங்கினர்.
திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அனைத்து மகளிர் காவலர்கள் புகாரளித்த நிலையில் பூர்ணிமா மற்றும் அவரது கணவர் லட்சுமி காந்தை நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





