சிறுமியிடம் அத்து மீறிய ஆட்டோ ஓட்டுநர்..!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 10 வயது சிறுமியிடம் தொடர் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
முகமது அசார் என்ற அந்த நபர் கணவரை பிரிந்து வாழும் மைத்துனியின் மகளுக்கு கடந்த சில மாதங்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு தந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தமது தாயிடம் புகார் கூறியும் அவர் தட்டி கேட்காததால் பாட்டியிடம் வந்து சிறுமி கூறியதாகவும் இதன் பேரில் பாட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததாகவும் தெரிகிறது.
இது பற்றி அறிந்து சிறுமியை பாட்டி வீட்டில் இருந்து தூக்கி செல்ல முயன்ற அன்சாரை அந்த பகுதி மக்கள் அடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





